தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இனிப்பு கடை உரிமையாளரின் புதிய முயற்சி...

திருவாரூரில், மழை நீரை சேகரித்து அதன் மூலம் தன் கடையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் இனிப்பு கடை உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இனிப்பு கடை உரிமையாளரின் புதிய முயற்சி...
x
திருவாரூர், அண்ணா சாலையில்  இனிப்பு கடை நடத்தி வரும் ராகுல்
தன், கடையின் கூரை மீது விழும் மழை நீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேகரித்து வருகிறார். இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டு தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீரை கொண்டே இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தன் கடையில் தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு அதிக சுவை கிடைப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குடிக்கவும் இந்த நீரையே வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்