நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு விவாதம் நடத்தப்படவில்லை - திமுக எம்.பி.கனிமொழி

பெண்கள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
x
சென்னையில் உள்ள கல்லூரியில் நடந்த இந்த நிகழ்வில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய எம்.பி. கனிமொழி, நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு விவாதம் நடத்தப்படவில்லை என்றார். குறிப்பாக விவாதிக்கப்பட வேண்டிய பட்டியலில் கூட பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இல்லை என்றும் தெரிவித்தார். 
14 % பெண்கள் பாராளுமன்றத்தில் வந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும் அடுத்த முறை நடக்குமா என்பது தெரியாது என கூறிய அவர், 33 % இடஒதுக்கீடு கிடைத்தால் தான் பெண்களுக்கான சம நீதியை பெற முடியும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்