ஏரியில் கொட்டப்படும் குப்பைகள் : விவசாய கிணறு, நீர் நிலைகள் பாதிப்பு - விவசாயிகள் வேதனை

ராசிபுரத்தில் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரியில் நகராட்சி குப்பைகளை கொட்டி வருவதால், விவசாய கிணறு மற்றும் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு, விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
x
நாமக்கல், ராசிபுரம் அருகில் உள்ள தட்டான்குட்டை ஏரி, சுமார் 44 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் உள்ள நீர்ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு தான் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்று வந்தன. 

ஆனால் தற்போது  தட்டான்குட்டை ஏரியில், ராசிபுரம் நகராட்சி பகுதிகளிலுள்ள 27வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வந்ததால், தற்போது ஏரி முழுவதும் குப்பை கழிவுகள் குவிந்துள்ளன. இவை அல்லாமல் சாக்கடை நீரும் கலந்து அதிக துர்நாற்றம் ஏற்படுவதுடன் நீர் ஆதாரம் கெட்டுபோய், கிணறுகளில் உள்ள நீர் மாசு கலந்து காணப்படுகிறது. 

இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தொடர்ந்து, உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்