ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை

திருப்பதி வேங்கடமுடையானுக்கு மரியாதை செய்யும் வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் அனுப்பப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை
x
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் இருந்து திருமலை திருப்பதி மூலவர் ஸ்ரீவேங்கடமுடையானுக்கு ஆண்டுதோறும் ஆடிமாதம் முதலாம்நாள் வஸ்திர மரியாதை வைபவம் நடத்தப்பட்டுவருவது வழக்கம். மொகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் விக்ரகங்கள் திருப்பதியில் 50 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த வைபவம் கடைபிடிக்கப்படுறது.

ஆடி மாதம் நாளை பிறப்பதையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், மங்கல பொருட்கள் அனைத்தும் பெரிய தட்டுகளில் ரங்க விலாச மண்டபத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க வஸ்திரங்கள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வஸ்திரங்கள் ஆடி மாதம் முதல் நாளான நாளை, வேங்கடமுடையானுக்கு சாத்தப்பட்டு பூஜைகள் செய்யப்படும்.

Next Story

மேலும் செய்திகள்