4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது
பதிவு : ஜூலை 15, 2019, 06:17 PM
மாற்றம் : ஜூலை 15, 2019, 06:23 PM
திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் சமீபத்தில் 4 வயது சிறுமியை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பாலியல் வன்முறை செய்து கொன்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில். வெள்ளவேடு உள்ள செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த ஒரு தம்பதியர் வந்துள்ளனர். கடந்த 6 வருடங்களாக இவர்கள் இங்கே தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் இவர்களுக்கு 4 வயதில் சிறுமி உள்ளார்.  செங்கல் சூளையில் வேலை முடிந்து பெற்றோர் வீடுதிரும்பிய போது  சிறுமியை காணவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தும் மகளை காணாததால் அதிர்ந்து போன  பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், சிறுமி அந்த பகுதியில் உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது  தெரியவந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் வேலை பார்க்கும் அதே செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2188 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10012 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5187 views

பிற செய்திகள்

ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்குள் கொட்டக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இயற்கை வளத்தை பாதுகாக்க, ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

3 views

வடமாநில சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் : போலீசார் தீவிர விசாரணை - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டு, தாம்பரத்தில் மர்ம கும்பல் ஒன்று வடமாநில சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

114 views

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

16 views

பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் : ஆந்திர-தமிழக மீனவர்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரி நிரந்தரமாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என திருப்பாலைவனத்தில் நடைபெற்ற 52 மீனவ கிராம மக்களின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

7 views

ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

13 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.