இன்று கிராம அஞ்சல் ஊழியர் தேர்வு - 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் கிராமிய அஞ்சல் துறை ஊழியர் பணியிடங்களுக்குகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
x
நாடு முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிராமிய அஞ்சல் துறை ஊழியர் பணியிடங்களுக்குகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மதுரை ஆகிய 4 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் இன்று காலை 10 மணிக்கு இத்தேர்வு தொடங்கியது. 2 தேர்வுத்தாளை கொண்ட இந்த தேர்வின் முதல் தாளில் 50 மதிப்பெண்களுக்கு அஞ்சல் துறை சார்ந்த கேள்விகள் 20 மதிப்பெண்களுக்கு பொது அறிவு மற்றும் 30 மதிப்பெண் களுக்கு கணிதம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

50 மதிப்பெண்கள் கொண்ட இரண்டாம் தாளில் ஆங்கிலத்தில் இருந்து மாநில மொழிக்கும் மாநில மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கும் வாக்கியங்களை மாற்றம் செய்யும் கேள்விகள் இடம் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே   மத்திய அரசு கடந்த 11-ஆம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே முதல் தாளில் கேள்விகள் கேட்கப்படும் என்றும், இரண்டாம் தாளுக்கான தேர்வு அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசீர்வாதம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று அஞ்சல் துறை தேர்வை நடத்தலாம் என்றும், முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முதல் தாள் சிரமமாக இருக்கும் என்று தேர்வு எழுத வந்தவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்