தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? - மதுசூதனன்

தண்டையார்பேட்டையில் ஸ்டாலினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து அ.தி.மு.க. வினர் தண்ணீர் விநியோகம் செய்தனர்.
தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? - மதுசூதனன்
x
சென்னை, தண்டையார்பேட்டையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து அ.தி.மு.க. வினர் தண்ணீர் விநியோகம் செய்தனர். தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே 10  குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகளை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு குடிநீர் லாரிகளிலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக  வாசகங்கள் அச்சிடப்பட்டு இருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன்,தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என  கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்