சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
சென்னையில், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை  தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் சந்திரகுமாரை, ஆணையராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தினமும் 300 லாரிகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாகவும், இதற்கு காவல் ஆய்வாளர் நடராஜ் உடந்தையாக இருப்பதாகவும், சந்திரகுமார் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து,பழவந்தாங்கல் ஆய்வாளருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நிலத்தடி நீரை சட்ட விரோதமாக எடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.மேலும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை அதிகாரி உள்பட மூவருக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்