தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
x
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தி.மு.க. சார்பில், வழக்கறிஞர் வில்சன், சண்முகம்,  அ.தி.மு.க. சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன் போட்டியிட்டனர். அ.தி.மு.க. கூட்டணி சார்பில், பா.ம.க. இளைஞரணி தலைவர்  அன்புமணி ராமதாஸ், தி.மு.க. கூட்டணி ஆதரவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  இந்நிலையில், மனுத் தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.  மாநிலங்களவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள், அதற்கான சான்றிதழை சட்டப்பேரவை செயலாளரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்