கோயிலில் ஐம்பொன் சிலை மாயம் - கண்டுபிடித்து தர கிராம மக்கள் கோரிக்கை

சவுடார்பட்டியில் சிதிலமடைந்த கோயிலில் இருந்து மாயமான ஐம்பொன் சிலையை கண்டுபிடித்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
x
திருமங்கலம் அடுத்த சவுடார்பட்டியில், சிதிலமடைந்த கோயிலில் இருந்து மாயமான ஐம்பொன் சிலையை கண்டுபிடித்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோயிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் உற்சவர் சிலைகள் உட்பட 5 ஐம்பொன் சிலைகள் அங்கிருந்து எடுத்து வரப்பட்டு கிராமப் பூசாரி வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர். இந்து அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சிதைந்த கோயிலை சீரமைத்து, ஐம்பொன் சிலைகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என சவுடார்பட்டி கிராமமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்