ராணிப்பேட்டையில் பார்மா பூங்கா வேண்டும் : அமைச்சர் சதானந்தவிடம் எம்.பி.ஜெகத் ரட்சகன் கோரிக்கை
பதிவு : ஜூலை 10, 2019, 05:14 PM
ராணிப்பேட்டையில் பார்மா பூங்கா அமைக்க வேண்டும் என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் அரக்கோணம் தொகுதி எம்.பி ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டையில் பார்மா  பூங்கா அமைக்க வேண்டும் என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் அரக்கோணம் தொகுதி எம்.பி ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடந்த சந்திப்பின் போது, இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அமைச்சரிடம் அவர் கொடுத்தார். சாலை, ரயில், விமானம் என மூன்று போக்குவரத்துக்கு மிகவும் எளிமையாக அரக்கோணம் தொகுதி இருப்பதால், மருந்து, அழகு சாதனம் மற்றும் நறுமணப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களை இங்கு அமைக்கலாம் என வலியுறுத்தியுள்ளார். நிறுவனங்கள் அமைக்கப்பட்டால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜெகத்ரட்சகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1508 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7217 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4815 views

பிற செய்திகள்

ஹெல்மெட்டுக்குள் செல்போன் வைத்து பேசுபவரா நீங்கள் ? உஷார்... ஒசூரில் நடந்த விபரீதம்

ஒசூர் அருகே ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்துக் கொண்டு பேசிய போது அது திடீரென வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 views

பெருங்களத்தூர் - சிங்கப்பெருமாள் கோயில் வரை 8 வழிச்சாலை : சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை பெருங்களத்தூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பன்னடுக்கு மேம்பாலம் விரைவில் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

57 views

கிடப்பில் போடப்பட்ட சென்னை- புதுச்சேரி - கடலூர் வரையான ஈ.சி.ஆர். தடம்...

சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரையான ஈ.சி.ஆர் மார்க்க ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

16 views

மனைவியை கணவனே கொன்று விட்டு நாடகம் : ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல்

மனைவியை கணவனே அடித்து கொன்று விட்டு நாடகமாடுவதாக கூறி, இறந்த பெண்ணின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

15 views

ஆலங்குடியில் இரு பிரிவினரிடையே மோதல் - பதற்றம் : போலீசார் குவிப்பு - 11 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது.

16 views

நீலகிரி மலை ரயில் பாரம்பரிய தினம் : பாரம்பரியமிக்க "எக்ஸ் கிளாஸ்" இன்ஜினுக்கு அலங்காரம்

உலகில் உள்ள ஒரே பாரம்பரியமிக்க 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜினை வைத்து, நீலகிரி மலை ரயில் பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.