கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுமா?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
x
தஞ்சை மாவட்டத்துக்கு உட்பட்ட கும்பகோணம் சோழப்  பேரரசில் தலைநகராக இருந்தது. தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், வருவாய்துறை, வணிகவரித்துறை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகங்களும் கும்பகோணத்தில் உள்ளன. புதிய மாவட்ட அமைப்பு விதிகளின்படி வருவாய் பரப்பளவு, மக்கள் தொகை, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் கும்பகோணத்தில் உள்ளதால் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே எழுந்தது. கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் கும்பகோணத்தையும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளூர்வாசிகள் மத்தியில் எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்