"கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் திடீர் மழை



புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தது. அனல் காற்று வீசியதால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்த்து வந்தனர் . இந்நிலையில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அண்ணா சாலையின் ஓரத்தில் இருந்த பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஆட்டோ முற்றிலும் சேதமடைந்தது. மரம் விழுந்ததால்  அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை



காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் பேருந்து நிலையம், காந்தி சாலை வாலாஜாபாத், பாலுசெட்டிசத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. அத்தி வரதர் தரிசனம் முடித்து சென்ற பக்தர்களும், வாகன ஓட்டிகளும் இரவு வேளையில் பெய்த மழையினால் சற்று வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்