படித்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கியுள்ள முன்னாள் மாணவிகள்...

எவ்வளவு உயரத்தை தொட்டாலும் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என சொல்வார்கள். அப்படி தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காமல் தங்கள் பள்ளிக்கு நன்றிக்கடன் செய்துள்ளனர் முன்னாள் மாணவிகள்.
x
புதுச்சேரியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 1943ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் தற்போது பல்வேறு உயர் பதவியில் உள்ளனர். தங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளிக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை முன்னாள் மாணவிகள் வழங்கியுள்ளனர். பள்ளியின் பெயருக்கு ஏற்றார் போல் பள்ளியின் முகப்பு மதில் சுவர் முழுவதுமாக திருக்குறள் எழுத ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகள் படிப்பு வசதிக்காக இரண்டு ஸ்மார்ட் போர்டுகள், எல்.சி.டி ப்ரொஜெக்டர் இரண்டும் வழங்கி உள்ளனர். மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பள்ளி வளாகம் முழுவதுமாக எட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை பார்வையிடும் வசதியை துணை தலைமையாசிரியருக்கு தரப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டால் தொடர்ந்து மின் வசதிக்காக இன்வெர்ட்டர், எல்.இ.டி டிவி, கம்ப்யூட்டர் பிரிண்டர், ஏசி  என பல வசதிகள் உருவாக்கி தந்துள்ளனர். வகுப்பறையில் மாணவிகள் அமரும் பெஞ்ச், டெஸ்க்களை வர்ணம் பூசி உள்ளனர். பள்ளியில் விழா நடக்கும் போது மாணவர்கள் தரையில் அமராமால் இருக்க 350 நாற்காலிகள், ஆடியோ சிஸ்டம், விளையாட்டு சாதனங்கள், என பல பொருட்களை வழங்கி யிருக்கிறார்கள். இது எனது பள்ளி, இப்பள்ளியால் நான் பெருமை அடைகிறேன், என்னால் இப்பள்ளி பெருமை அடையும் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப பள்ளியை பெருமை அடைய செய்திருக்கிறார்கள், முன்னாள் மாணவிகள். 

Next Story

மேலும் செய்திகள்