முகிலன் சிக்கியது எப்படி? - சி.பி.சி.ஐ.டி. போலீசார் விளக்கம்

காணாமல்போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் எப்படி பிடிபட்டார் என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
முகிலன் சிக்கியது எப்படி? - சி.பி.சி.ஐ.டி. போலீசார் விளக்கம்
x
கடந்த 6ஆம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் ஒரு நபர் மன்னார்குடி செல்லும் ரயில் முன் நின்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து அந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அந்த நபர் தமது பெயர் முகிலன் என்றும், தாம் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தெரிந்தவுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார், திருப்பதி ரயில்வே போலீசாரை தொடர்புகொண்டு பேசியபோது, அவர் தேடப்பட்டு வந்த முகிலன் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் காட்பாடி விரைந்தனர். பின்னர், முகிலனுக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, முகிலன் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு முகிலன் எங்கிருந்தார் என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலையில் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில், முகிலன் கைது செய்யப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்