மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு...

சென்னையில் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
x
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை சென்னையில் துவங்குகிறது. இந்நிலையில் இன்று இதற்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் மற்றும் மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் பெற்றுக் கொண்டனர். தரவரிசை பட்டியலில் திருவள்ளூரைச் சேர்ந்த மாணவி சுருதி முதல் இடத்தையும், அஸ்வின்ராஜ் 2ஆம் இடத்தையும், இளமதி 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கு பழைய மாணவர்கள்  17 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் நாள் அன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், மறுநாள் முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. 

"திருவள்ளூரை சேர்ந்த ஸ்ருதிக்கு முதலிடம்"

மருத்துவ படிப்புக்கான  தரவரிசை பட்டியலில் திருவள்ளூரை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன், அந்தியூரை சேர்ந்த அஸ்வின் ராஜ் இரண்டாம் இடமும், கோவையை சேர்ந்த இளமதி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்