ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.2.5 லட்சம் திருட்டு - பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை என தகவல்

ரயில் கொள்ளையனின் ஏ.டி.எம். கார்டை விசாரணை செய்த, பெண் காவல் ஆய்வாளரே பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.2.5 லட்சம் திருட்டு - பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை என தகவல்
x
கடந்த மே 17 ஆம் தேதி சாகுல் அமீது என்ற கொள்ளையனை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து, நகைகள் உள்ளிட்ட சில பொருட்களும், 15 ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் போது, 2 ஏ.டிஎம் கார்டுகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, ரயில்வே டி.ஜி.பி உத்தரவின் பேரில், விசாரணை நடத்திய போது, ஏ.டி.எம். கார்டுகளை, பெண் ஆய்வாளர் கயல்விழி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் 2 வங்கி கார்டுகளை பயன்படுத்தி, இரண்டரை லட்ச ரூபாய் பணம், எடுக்கப்பட்டதும், விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தயார் செய்து  சென்னை காவல் ஆணையருக்கு ரயில்வே காவல் துறை அனுப்பியுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் கயல்விழி மீது துறை ரீதியான நடவடிக்கை பாய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்