குடிநீர் வழங்க கோரி தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

ஓமலூர் அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்க கோரி தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குடிநீர் வழங்க கோரியும்,  போர்வெல் போடுவதை தடுக்கும் நபர் மீது நடவடிக்கை  எடுக்க கோரியும் கிராம மக்கள் தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு   போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்கும் வகையில் போர்வெல்  அமைக்கவர்களை அப்பகுதியை சேர்ந்த பேபி என்பவர் தடுத்து வருவதாகவும் அவருக்கு ஒன்றிய உதவி பொறியாளார் உள்ளிட்டோர் ஆதரவாக செயல்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து பைப்பூர் பகுதியில் போர்வெல் அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்