மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
x
ஜூலை 18 ந்தேதி நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் 3 இடங்களில் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இரண்டு இடங்களில் திமுக வேட்பாளர்களும், ஒரு இடம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒதுக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொமுச பேரவை பொது செயலாளர் சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் தி.மு.க. சார்பில்  வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்