ஆணவப்படுகொலை தொடர்பாக தனி சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் - முருகன்

ஆவணப்படுகொலை தொடர்பாக தனிச்சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
x
கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ், வர்ஷினிப்ரியா ஆணவப்படுகொலையில், உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த ஆணவப்படுகொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொலை செய்யப்பட்ட பெண் தாழ்ப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடாக முதல்கட்டமாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஆவணப்படுகொலை தொடர்பாக தனிச்சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்