சென்னையில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான பரிதாபம்

ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
தாம்பரம் அடுத்த சேலையூரில் வசித்து வந்தவர் பிரசன்னா. இவரது மனைவி அர்ச்சனா. பிரசன்னா, தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர்கள் வீட்டில் இருந்த ப்ரிட்ஜ் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, பிரசன்னாவின் தாய் ரேவதி, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ப்ரிட்ஜ் வெடித்த போது, அதிலிருந்து வெளியான வாயு கசிந்ததில் 3 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஃப்ரிட்ஜ் வெடித்த பயங்கரம் : தனியார் டிவி செய்தியாளர் பிரசன்னா மற்றும் குடும்பத்தினர் உயிரிழப்பு 


அதிக அளவு மின்சாரம் வந்தது தான் ஃப்ரிட்ஜ் வெடித்த காரணம் - ஸ்ரீதரன், ஃப்ரிட்ஜ் தொழில்நுட்ப வல்லுநர்


Next Story

மேலும் செய்திகள்