பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றிக்கூறியதால் பரபரப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றிக்கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
சேலம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன்,  கூலித்தொழிலாளி. நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி கோமதி, பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பின்னர் சில நிமிடங்களிலேயே அது பெண் குழந்தை என மாற்றிக் கூறியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால்  வெங்கடேசன், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீஸார் இதுதொடர்பாக  விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்