சமூக வலை தளத்தில் மார்ஃபிங் புகைப்படம் - பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் ஆணையரிடம் புகார்

சமூக வலை தளத்தில், தவறான புகைப்படத்தை பதிவிட்டதால், நெய்வேலியில் இளம் பெண் மற்றும் அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி நீங்குவதற்குள், சென்னையில் மீண்டும் இது போன்ற புகார் எழுந்துள்ளது.
x
சென்னை பெருங்குடியில் தமது மனைவியுடன் வசித்து வரும் இளைஞர், கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தமது மனைவியின் முகநூல் பக்கத்திலிருந்து புகைப்படத்தை சிலர் எடுத்து ஆபாசமாக மார்ஃபிங் செய்து பதிவிட்டுள்ளதாக கூறியுள்ளார். அம்சத் பேகன் என்ற ஒரு பொய்யான கணக்கில் இது போன்ற மார்ஃபிங் புகைப்படங்கள் பதிவிடப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்