2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலா மற்றும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. அந்த பழங்களை சுவைப்பதற்காக கரடி கூட்டம் படை எடுத்து வருகிறது.
x
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலா மற்றும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. அந்த பழங்களை சுவைப்பதற்காக கரடி கூட்டம் படை எடுத்து வருகிறது. குன்னூரில் இருந்து அரவேணு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இரண்டு குட்டிகளை தோளில் சுமந்தவாறு தாய்க்கரடி தேயிலைத் தோட்டத்தில் உலா வந்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தேயிலைத் தோட்டத்தில் இருந்து சாலைக்கு வந்த கரடி இரண்டுமுறை காரை சுற்றி சுற்றி வந்தது. காரில் இருந்தவர்கள் ஒருவித அச்சத்துடன் அமைதியாக கரடி நிற்பதை திகிலுடன் கண்டு ரசித்து கொண்டிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்