சென்னை சுற்று வட்டாரங்களில் திடீர் மழை...

சென்னை சுற்று வட்டாரங்களில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்ததால், விமானங்களின் புறப்பாடும், தரையிறக்கமும் தாமதமாயின.
சென்னை சுற்று வட்டாரங்களில் திடீர் மழை...
x
கடந்த சில நாட்களாக, வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், சென்னையின் அடையாறு, திருவான்மியூர், மீனம்பாக்கம் விமானநிலைய பகுதிகளில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சென்னையிலிருந்து விசாகப்பட்டினம், கொச்சி, டெல்லி, ராஜமுந்திரி, திருச்சி செல்ல வேண்டிய விமானங்கள் அரை மணி நேரம் வரை தாமதமாயின. இதே போல், சென்னைக்கு தரையிறங்க வேண்டிய திருச்சி, கொல்கத்தா, திருவனந்தபுரம், நாக்பூா், டெல்லி விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. 

Next Story

மேலும் செய்திகள்