பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - சௌம்யா அன்புமணி
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சௌம்யா அன்புமணி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து பாமக இளம்பெண்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் எம்.பி ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌம்யா அன்புமணி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஒரே மாதத்திற்குள் குற்றவாளிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
Next Story