இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதித்த தடையை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் இயக்குநர் பா. ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
x
சர்ச்சைக்குரிய வழக்கில் பேசியதாக தொடரப்பட்டட வழக்கில், முன் ஜாமீன் கோரி, இயக்குநர் பா.ரஞ்சித் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் பா.ரஞ்சித்திற்கு ஆதரவாக தன்னையும் இந்த வழக்கில் சேர்க்கக் கோரி வழக்கறிஞர் ரஜினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு சட்டரீதியாக வாய்ப்பில்லை என கூறினார். அதற்கு வழக்கறிஞர் ரஜினி தரப்பில் அது தொடர்பாக சில உத்தரவுகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதே போல மனுதாரர் ரஞ்சித் தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார். அதுவரை கைது செய்யக்கூடாது என விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்க, மறுத்த நீதிபதி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்