பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
x
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் சார்பில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் விரைவில் தொடங்க உள்ள ஏழாவது பொருளாதார கணக்கெடுக்கும் பணிக்கு, மக்கள் உண்மையான விவரங்களை அளிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார். கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கணக்கெடுப்பு பணி மூன்று மாதங்களுக்கு  நடைபெறும் என்றும், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்