21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
x
உலகிலேயே அதிகஅளவில் நிலத்தடி நீரினை பயன் படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனை புரிந்து கொண்ட பல மாநிலங்கள், அண்மைக்காலமாக இயற்கையில் கிடைக்கும் நீரை பயன்படுத்தவும், நிலத்தடி நீரை சேமித்து வைக்கவும்தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இருந்த போதிலும் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் , போதிய மழை பெய்யாததாலும் நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்திற்குள் சென்றுள்ளது.  இந்நிலையில் இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம் குறித்து நிதிஅயோக் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது எனவும், இதனால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீத பேருக்கு குடிநீர் வசதி இருக்காது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 3 ஆறுகள், 4 நீர் நிலைகள், 5 சதுப்பு நிலங்கள், 6 காடுகள் ஆகியவை முற்றிலும் வறண்டு விட்டதாகவும் நிதி ஆயோக் வெளியிட்ட தகவல் மூலம் வெளியாகி உள்ளது. அதேபோல் சென்னையை விட மற்ற மெட்ரோ நகரங்களில் நீர் ஆதாரங்களும், மழைப்பொழிவும் அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்