தந்தி டி.வி செய்தி எதிரொலி: கும்பகோணம் நகர மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம்
தந்தி டி.வி செய்தி எதிரொலியாக கும்பகோணம் நகர மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
பானாதுரை, பாணபுரீஸ்வரர், திருமஞ்சனம் ஆகிய இடங்களில் கடந்த ஆறு நாட்களாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது தொடர்பான செய்தி தந்தி டி.வி-யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை பார்த்த கும்பகோணம் நகராட்சி அதிகாரிகள் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நான்கு நாட்களுக்கு பிறகு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். செய்தி ஒளிபரப்பி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்த தந்தி டி.வி-க்கு கும்பகோண நகர மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story