தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் பெரியார் நகரை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது பேத்தியுடன் மருத்து வாங்க  அரியலூர் சின்ன கடைத்தெருவில் உள்ள ஒரு மெடிக்கலுக்கு சென்றுள்ளார். மருந்து வாங்கிவிட்டு  இருசக்கர வாகனத்தில் பேத்தியை ஏற்ற முயன்ற போது பின்னால் வந்த ஒரு மினி லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட  முருகேசன் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் நூலிழையில் பேத்தி உயிர் தப்பிய நெஞ்சை பதற வைக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்