உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு
பதிவு : ஜூன் 19, 2019, 02:05 PM
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ளாட்சி தேர்தலில், வாக்காளர் பெயர் பட்டியலில், மக்கள் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்யும் வழிவகை இல்லை. அதேபோல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் தேர்தல் ஆணையத்தில், அவர்களின் இணையத்தில் வெளியிடுவதில்லை. எனவே வரும் உள்ளாட்சித் தேர்தல் முதல்,  உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விபரங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அரசுத்தரப்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பதிவேற்றம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

61 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

781 views

பிற செய்திகள்

மாணவர் ரம்பு படுகொலை - நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

மதுரை மேலூரில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட மாணவர் ரம்புவின் படுகொலைக்கு நீதி கேட்டு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

8 views

நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் ஸ்ரேயா

"சண்டக்காரி தி பாஸ்" திரைப்படம் மூலம் நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார், நடிகை ஸ்ரேயா.

9 views

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... அதிர்ச்சி தகவல்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

36 views

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய்மை பணிகள் : சர்வ தரிசனம், ​​திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

59 views

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு : வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

24 views

ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதி கைது

ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி பஷீர் அகமது என்பவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று ஸ்ரீ நகரில் கைது செய்துள்ளனர்.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.