மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
x
600 ஆண்டுகள் பாரம்பரியமிக்க வெள்ளலூர் ஏழை காத்த அம்மன், வல்லடிக்காரர் கோயில்களை கையகப்படுத்த தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓரிடத்தில் ஒன்று திரண்ட சுமார் 5 ஆயிரம் பேர், பேரணியாகச் சென்று மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், சந்தித்து கோரிக்கை மனு வழங்க திட்டமிட்டிருந்தனர். பாரம்பரிய மிக்க கோயில்களை கையகப்படுத்தும் முடிவை இந்து சமய அறநிலையத்துறை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, நீண்ட நேரமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்