பலத்த கடல் சீற்றம் எதிரொலி - கடலோர பாதுகாப்பு படை படகு கரையோரத்தில் நிறுத்தம்

கடலோர பாதுகாப்பு படை படகு பலத்த கடல் சீற்றத்தின் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டது.
பலத்த கடல் சீற்றம் எதிரொலி - கடலோர பாதுகாப்பு படை படகு கரையோரத்தில் நிறுத்தம்
x
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கடலோர பாதுகாப்பு படை படகு பலத்த கடல் சீற்றத்தின் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் கடல் வழியாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கடலோர பாதுகாப்பு படையின் நவீன படகு ஒன்று கடல் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது மாமல்லபுரம் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது.  இதனால் அந்த படகு  மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு தெற்கு பக்க கடற்கரையில் கொண்டு வரப்பட்டு கரை நிறுத்தப்பட்டது.  கடல் சீற்றம் தனிந்ததை அடுத்து அந்த படகு புறப்பட்டு சென்றது.

Next Story

மேலும் செய்திகள்