திருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

திருப்பதி சோதனைச் சாவடியில் தமிழக பக்தர்கள் மீது தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் திருமண நிகழ்ச்சிக்காக , காஞ்சிபுரத்தை அடுத்த  மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த  40 பேர்  சென்றுள்ளனர்.

அலிபிரி சோதனைச்சாவடியில் சோதனை நடத்தியபோது கன்னியப்பன் என்பவரிடமிருந்து புகைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பு ஊழியர்கள் அதை பறித்து குப்பையில் வீச முயன்றனர். அதை கன்னியப்பன் எடுக்க முயன்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த போலீசார், கன்னியப்பனை தாக்கியுள்ளனர். 

அவரது உறவினர்கள்  தடுக்க முயன்றபோது தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் போலீசார் 10க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் கன்னியப்பன், டில்லிபாபு மற்றும் சந்திரா என்ற பெண்மணிக்கு காயம் ஏற்பட்டது. சந்திரா, திருமலையில் உள்ள அரசு அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

மன அமைதி வேண்டியும், நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கோயிலுக்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 


Next Story

மேலும் செய்திகள்