வரும் 25ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் - தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு அழைப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் வருகிற 25ஆம் தேதி டெல்லி மீண்டும் கூடுகிறது.
x
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9 புள்ளி ஒன்று ஒன்பது டிஎம்சி நீரை திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதுவரை இன்னும் காவிரி நீர் திறக்கப்படவில்லை. இது குறித்து விவாதிக்க, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதனை ஏற்று, வருகிற 25ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் மீண்டும் கூடுகிறது. இந்த தகவலை காவிரி தொழில்நுட்ப குழு தலைவராக சுப்ரமணியன் உறுதிபடுத்தியுள்ளார். கர்நாடகா அரசு தண்ணீர் திறக்காதது குறித்தும், ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீர் பற்றியும் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகளுக்கு காவிரி ஆணையம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்