செப்டம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்..?

தமிழக உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்..?
x
தமிழகத்தில் நீண்ட காலமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறிவந்த நிலையில்,  தற்போதைய  நிலை குறித்து கூறியுள்ள அதிகாரிகள் ,  உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் அளவிற்கு முடிந்து விட்டன  என்றும்,  எஞ்சியுள்ள பணிகள் ஜூலை மாதத்தில் முடிவடைந்து விடும் என்றும் கூறினர். தேர்தலுக்கான அட்டவணை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் எதிர்பார்க்கலாம் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில், மாநில தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்