தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் : பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகள் கருத்து

திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் : பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகள் கருத்து
x
திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தலைமையிலான தீயணைப்பு படையினர், மாணவிகளுக்கு தீ விபத்து மற்றும் பேரிடர் ஏற்பட்டால் அதில் இருந்து எவ்வாறு தப்புவது, மற்றவர்களுக்கு எவ்வாறு உதவுவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை செய்து காண்பித்து விளக்கினர். இது குறித்து கருத்து தெரிவித்த மாணவிகள், நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், எளிமையாக புரியும்படி விளக்கியதாகவும் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்