வட இந்தியாவில் வீசும் வெப்பக் காற்று - தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி
பதிவு : ஜூன் 11, 2019, 05:48 PM
கோவையில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட 4 பேர், கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கோவை மற்றும் குன்னூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் காசி, அலகாபாத், கயா, திரிவேணி சங்கமம்  மற்றும் ஆக்ராவுக்கு ஒரு குழுவினர் சென்றுள்ளனர். காசி உள்ளிட்ட பகுதிகளில் புனித பயணத்தை முடித்து விட்டு, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சுப்பையா உள்ளிட்ட 4 பேர் நேற்று பிற்பகலில் ஆக்ரா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்த நிலையில், கடும் வெப்பம் காரணமாக மாலை 5 மணி அளவில் ஜான்சி ரயில் நிலையத்தில் பாலகிருஷ்ணன் சுருண்டு விழுந்து இறந்துள்ளார். 

அவரை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் அதே ரயில் பயணம் செய்த சுப்பையா உள்ளிட்ட மற்ற 3 பேரும் கடும் வெப்பம் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உத்தரபிரதேசம் சென்றுள்ளனர். இந்த மரணம் குறித்து, தந்தி டி.விக்கு தொலைபேசியில் பேசிய நந்தகுமார் என்பவர், வெப்பத்தின் தாக்கம் குறித்து மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1297 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5819 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6614 views

பிற செய்திகள்

அமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

25 views

மேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்

மேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.

14 views

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

76 views

"ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 155 பேர் கைது" - மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 155 நபர்களை, இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

34 views

சந்திரபாபு நாயுடு மகன் இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

ஆந்திராவில் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

374 views

"புதுச்சேரியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்" - பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரியில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.