காவல் நிலையத்தை திறந்து வைத்த உதவி ஆய்வாளர்...

சிதிலமடைந்த காவல் நிலையத்தை புதுப்பிக்க, ஓய்வு பெற்ற பின்னரும் பணியாற்றி உதவி ஆய்வாளரை கவுரவித்தத, மாவட்ட எஸ்.பி.யின் நடவடிக்கை காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காவல் நிலையத்தை திறந்து வைத்த உதவி ஆய்வாளர்...
x
கடலூர் சில்வர் பீச்சில் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தின் புறக்காவல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில்,  2004 சுனாமியின் போது தரைமட்டம் ஆனது. இதனைத் தொடர்ந்து  காவல் நிலையம் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் 2011 இறுதியில் தானே புயலின்போதும் கடும் சேதத்தை சந்தித்தது. பின்னர் புனரமைப்பு பணிகள் நடைபெறாமல் அங்கு புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்நி​லையில், கடந்த ஆண்டு தேவனாம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பொறுப்பேற்ற  ராஜசேகர்,  பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவியுடன் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார்.  கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பணி ஓய்வுபெற்ற நிலையிலும் ராஜசேகர்,   புனரமைப்பு பணிகளை அடிக்கடி பார்வையிட்டு பல்வேறு உதவிகளை பெற்றுக் கொடுத்து வந்தார். இந்நிலையில்,  மாவட்ட எஸ்.பி. சரவணன் திங்கள் மாலை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ராஜசேகரை காவல் நிலையத்தை திறந்து வைக்க எஸ்.பி. கேட்டுக் கொண்டார்.  இதனை சற்றும் எதிர்பாராத ராஜசேகர் காவல் நிலையத்தை திறந்து வைத்த போது,  அங்கு இருந்த கல்வெட்டில் அவருடைய பெயர் இருந்ததையும் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார். ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளரை,  காவல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட எஸ்.பி.யின் நடவடிக்கை விழாவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்