ரூ.8 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்கம் பறிமுதல்...

மலேசியா, சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ தங்கத்தை பறிமுதல்.
ரூ.8 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்கம் பறிமுதல்...
x
சர்வதேச நாடுகளில் இருந்து தமிழக விமானநிலையங்களுக்கு தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த 4 பயணிகளை, சுங்க இலாகா அதிகாரி ஒருவர் எந்தவித சோதனையும் செய்யாமல் வெளியே அனுப்ப முயன்றதை கண்டுபிடித்தனர். உடனே மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த 4 பேரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். பின்னர் அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில், 8 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்க கட்டிகள், டிரோன், விலையுயர்ந்த கேமராக்கள் ஆகியவற்றை அவர்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் மற்றும் இவர்களுக்கு உதவிய சுங்க இலாகா அதிகாரி என 5 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் சிலரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேடிவருகின்றனர். கடத்தல் கும்பலுக்கு சுங்கா இலாகா அதிகாரியே உதவியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்