கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா : கருணாநிதி உதவியாளர் நித்தியானந்தம் பங்கேற்பு
திருவாரூரில் தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
திருவாரூரில் தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினின் மைத்துனர் மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கருணாநிதியின் உதவியாளராக இருந்த நித்தியானந்தம், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது, அனைவரையும் மதிக்கக்கூடியவர் தலைவராக கருணாநிதி இருந்தார் என்றும், அவரை போல இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தத் தேர்தலில் பணியாற்றிய அளவிற்கு கடந்த பொதுத் தேர்தலிலும் பணியாற்றியிருந்தால் கருணாநிதி முதல்வராக இருந்திருப்பார் என நித்தியானந்தம் தெரிவித்தார்.
Next Story