காவிரி நீர் - கேட்டதும்... கிடைத்ததும்...
பதிவு : ஜூன் 09, 2019, 03:57 PM
டெல்டா பாசனத்திற்காக இதுவரை, 15 முறை மட்டுமே ஜூன் 12-ஆம் தேதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து, பெரும் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம், அம்மாநில அரசு காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அச்சமயங்களில் மேட்டூருக்கு வழங்க வேண்டிய நீரை விட கூடுதலாக தண்ணீர் வந்தடைகிறது. இதனை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீர் என்பதை கருத்தில் கொள்ளமுடியாது என்பது விவசாயிகளின் வாதம்.

2007-08 ஆம் ஆண்டில், மேட்டூர் அணைக்கு 148 டிஎம்சியும்,  2008-09 ஆம்  ஆண்டில் 4 டிஎம்சியும் கூடுதலாக தண்ணீர் வந்துள்ளது. அதேபோல் 2009-10 ஆம் ஆண்டில், 15 டிஎம்சியும்,  2010-11 ஆம் ஆண்டில் 4 டிஎம்சியும் அதிகமாக தண்ணீர் கிடைத்துள்ளது.  2011-12 ஆம்  ஆண்டில் 35 டிஎம்சி தண்ணீர் அதிகமாகவும்  2012-13 ஆம் ஆண்டில் 93 டிஎம்சி தண்ணீர் குறைவாகவும் தமிழக்திற்கு தண்ணீர் வழங்கியுள்ளது. 2013-14 ஆம் ஆண்டில்  கர்நாடகா வழங்க வேண்டியதை விட 68 டிஎம்சி தண்ணீரை தமிழக்திற்கு வழங்கியது. 

அதேபோல் 2014-15 ஆம் ஆண்டில் 37 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வழங்க வேண்டியதை விட குறைவான தண்ணீரையே கர்நாடகா வழங்கியது. 2015-16 ஆம் ஆண்டில் 36 டிஎம்சி குறைவாகவும், 2016-17 ஆம் ஆண்டில் 123 டிஎம்சி குறைவாகவும், 2017-18 ஆம் ஆண்டில் 77 டிஎம்சி குறைவாகவும் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கியது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டில் கர்நாடகாவில் பெய்த கனமழை மற்றும் வரலாறு காரணாத வெள்ளம் காரணமாக அதிக அளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. 2018-19ஆம் ஆண்டில் 371 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட்டது.  இது வழங்க வேண்டியதை விட 194 டிஎம்சி அதிகமாகும். ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் வரை 9 புள்ளி ஒன்பது இரண்டு சதவீதம் டிஎம்சி தண்ணீரை கர்நாடக வழங்கவேண்டும். ஆனால், இதுவரை பூஜியம் புள்ளி ஒன்று ஒன்பது சதவீதம் தண்ணீரை மட்டுமே வழங்கியுள்ளது. 

இது வழங்க வேண்டியதை விட 9 புள்ளி ஏழு மூன்று சதவீதம் குறைவாகும். vஇந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடி இருக்கும் போது மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் தற்போது 45 அடி மட்டுமே தண்ணீர் உள்ளதால் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கவே  வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 85 ஆண்டுகளில் 15 முறை மட்டுமே ஜூன்  12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. 59 முறை ஜூன்  12ஆம் தேதிக்கு பிறகே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் முழுமையாக நெல் சாகுபடி செய்யமுடியும்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1297 views

பிற செய்திகள்

"கர்நாடகம் நீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு" - புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தகவல்

கர்நாடகம் நீர் திறக்காததால் புதுச்சேரியும் பாதிப்படைந்துள்ளதாக, அம்மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார்.

7 views

தமிழகத்திற்கு ரூ. 22,762 கோடி ஒதுக்கீடு...மத்திய அரசு தகவல்....

அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

91 views

குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி கூறும் தீர்மானம் : பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை

ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டியது அவசியம் என, பிரதமர் மோடி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

15 views

அமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

27 views

மேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்

மேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.

15 views

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.