கொடைக்கானல் : இடி மின்னலுடன் கனமழை
நாளை மறுநாள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக நட்சத்திர ஏரியின் நீர்மட்டம் ஒரு அடிக்கு மேல் அதிகரித்தது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்று காரணமாக ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்தடை ஏற்பட்டது.
Next Story