7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பிய தீர்மானம் : தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வாரம் கால அவகாசம்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பிய தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பிய தீர்மானம் : தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வாரம் கால அவகாசம்
x
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன்பேரறிவாளன், ராபர்ட்  பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம்  என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில்  கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதற்கிடையே, விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர் 2012ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வாரம் அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.இதனிடையே, ஏழு பேர் விடுதலைக்காக உள்துறை செயலாளரிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம்  கோரியது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு  4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Next Story

மேலும் செய்திகள்