Detailed Report : 8 வழி சாலை திட்டம் : உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
"நிலத்தை கையகப்படுத்துவதில் தவறு உள்ளது"
சென்னை, சேலம் இடையிலான 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்து மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது நிலம் கையகப்படுத்துவதில் நிறைய தவறுகள் நடந்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். திட்டத்திற்கு அனுமதி கிடைப்பதற்கு முன்பே நிலத்தை எடுத்து தரவுகளை எப்படி சேர்த்தீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது குறித்து விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். மேலும் அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய அரசின் முயற்சி முறியடிப்பு
8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக பா.ம.க. வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
Next Story