8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை : விவசாயிகள் நூதன போராட்டம்

எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய கோரி சேலம் அருகே விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
எட்டு வழி சாலை திட்ட வழக்கில் மேல்முறையீடு செய்த மத்திய அரசை  கண்டித்து சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரத்தில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. இதில் குடும்பத்துடன் கலந்து கொண்ட விவசாயிகள் வாயில் கருப்பு துணியை கட்டி கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதேபோல் எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய கோரி ராமலிங்கபுரம், ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் விவசாயிகள் பட்டினி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்