செவிலியர் சாவில் மர்மம் - பெற்றோர்கள் புகார்

தனது மகளின் சாவில் கணவர் குடும்பத்தினருக்கு தொடர்பிருப்பதாக கூறி அவரது பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவிலியர் சாவில் மர்மம் - பெற்றோர்கள் புகார்
x
கோவை சூலூரில் வசித்து வருபவர் முரளி சங்கர். இவரது மனைவி பாண்டி மீனா. பல்லடம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணியாற்றி வந்த இவருக்கும், இவரது கணவர் மற்றும் கணவரின் பெற்றோருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் பாண்டி மீனா, மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த தனது மகளின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்து, பாண்டி மீனாவின் பெற்றோர், கணவர் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கொலை வழக்காக பதிவு செய்ய கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், கொலை வழக்காக பதிவு செய்யாத போலீசாரை கண்டித்து, பாண்டி மீனாவின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்புறம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்த அவர்கள் வரதட்சணை கொடுமையால் பாண்டி மீனாவை, அவரது கணவரின்  குடும்பம் கொலை செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்