கழிவு நீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்கள் : குடிநீருக்காக ஒரு கி.மீ துாரம் செல்லும் கிராம மக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குடிநீர் கிடைக்காததால் கழிவு நீரை வடிகட்டி குடிப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கழிவு நீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்கள் : குடிநீருக்காக ஒரு கி.மீ துாரம் செல்லும் கிராம மக்கள்
x
திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் ஆழ்துளை அமைத்து மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 மாதமாக மின்மோட்டார்கள் பழுது காரணமாக தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து செனறு காவிரி கூட்டு குடிநீர் மூலம் வரும் தண்ணீரை எடுத்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளத நீரும் ஆடு, மாடு பருகுவதால் கழிவுநீராக மாறி வருவதாகவும், தண்ணீரை வடிகட்டியே எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பழுதான மின்மோட்டார்களை சீர் செய்து உடனடியாக குடிநீர் வினியோகத்தை தொடங்க வேண்டும் எனவும் கிராமத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்