பார் உரிமையாளர் தற்கொலை - காஞ்சிபுரம் எஸ்பி-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு காஞ்சிபுரம் எஸ்பி-க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
மாமல்லபுரம் டி எஸ் பி அலுவலகத்தில் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு காஞ்சிபுரம் எஸ் பி-க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த டாஸ்மாக் பார் ஒப்பந்த உரிமையாளர் நெல்லையப்பன், போலீசார் மற்றும், அரசியல் பிரமுகர்கள் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அந்த புகாரை வாங்க மறுத்து அதிகாரிகள் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டிய நெல்லையப்பன், டி.எஸ்.பி அலுவலகத்திலே தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். நெல்லையப்பனின் மரணத்தை தாமாக முன்வந்து  விசாரணைக்கு எடுத்துகொண்ட தமிழ்நாடு மனித உரிமை ஆணையம்,  நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, காஞ்சிபுரம் எஸ் பி-க்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்